மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கறுப்பு நிறத்தில் கணவன், குழந்தை வெள்ளையாக பிறந்தது எப்படி?; கணவனின் சந்தேகத்தால் நடந்த பயங்கரம்.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், அரிக்காது கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ஓட்டுநராக வேலைபார்த்து வந்தார். அதே தெருவை சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து, 2012ல் திருமணம் செய்துகொண்டனர்.
தம்பதிகளுக்கு 9 வயது மகன், 7 வயது மகள் இருக்கின்றனர். முதல் குழந்தை சிவந்த நிறத்தில் பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தையும் சிவந்த நிறமாக பிறந்துள்ளது.
நான் கருப்பாக இருக்கும்போது, பிள்ளைகள் மட்டும் எப்படி சிவப்பாக பிறப்பார்கள்? என எண்ணிய ஐயப்பன், கடந்த 2020 ஜூலை மாதம் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஐயப்பன் கைது செய்யப்பட்டார். மயிலை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.