மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'நாய் குரைத்ததால் கத்திக்குத்து' உரிமையாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்.!
வளர்ப்பு நாய் குரைத்ததற்காக, வீட்டின் உரிமையாளர்களை ஒரு நபர் கத்தியால் குத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா நகர், 2வது தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (வயது 43). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திவாகர் (வயது 22). இளையமகன் ரித்தீஷ் (வயது 18).
இந்நிலையில், இவர்கள் வீட்டின் வளர்ப்பு நாய் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரை கண்டு குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் கோபமுற்ற தனசேகர் ராஜலட்சுமியிடம் சென்று கேட்டுள்ளார்.
மேலும், அவருடன் தனசேகர் தகராறு செய்த நிலையில், ஆவேசமடைந்த தனசேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகன்களையும் சரமாரியாக குத்தியுள்ளார்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்கள் மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.