சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
பயணிக்காக மாணவிகளை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற பேருந்து நடத்துனர்.. ஊர் மக்கள் திரண்டதால் பரபரப்பு.!

பயணிகளுக்காக 3 மாணவிகளை பேருந்து நடத்துனர் நடுரோட்டில் இறக்கிவிட்டு செல்ல, ஊரார் பேருந்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 8 A அரசு பேருந்து, பெரியபுத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளது. இந்த பேருந்து பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள மகாதேவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுள்ளது.
இதன்போது, பேருந்து நிறுத்தத்தில் 10 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் காத்திருந்த நிலையில், பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. 3 மாணவிகள் ஓட்டம் பிடித்து பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளனர்.
பேருந்து நெல்லித்துறை அருகேயுள்ள நந்தவனம் அருகே வருகையில், பயணிகள் சிலர் பேருந்தை மறித்து ஏறியுள்ளனர். இவர்களின் வசதிக்காக பேருந்து நடத்துனர் 3 மாணவிகளை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு, அவர்களை வேறு பேருந்தில் வருமாறு கூறி புறப்பட்டு சென்றுள்ளார்.
பேருந்தில் பயணிக்க இடமும் இல்லாத நிலையில், மாணவிகளும் நடந்தே வீட்டிற்க்கு இரவு 7 மணிக்கு மேல் சென்றுள்ளனர். பெற்றோர்கள் மகள்கள் தாமதமாக வந்த விஷயம் குறித்து விசாரணை செய்யவே, பேருந்து நடத்துனரின் கொடூர செயலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்து, நேற்று இரவு 7.30 மணிக்கு பெரியபுத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணம் செய்த பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓட்டுநர், நடத்துனரிடம் சரமாரி கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
கிராமத்தினர் நம்மை புடைத்தெடுத்துவிடுவார்கள் என்று பதறிப்போன இருவரும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெற்றோர்கள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தை மாணவ - மாணவிகள் உபயோகிக்கும் வகையில் பேருந்து நிறுத்தத்தில் சரியாக நின்று செல்வதாக உறுதியளித்தன் பேரில் பேருந்து பொதுமக்கள் விடுவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.