வேளாண் குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்புகள்; விவசாய பயிற்சிக்கு ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு.!



Minister pannerselvam speech agriculture budget

பேரீட்சை, அத்தி, ட்ராகன் புரூட், அவகேடா உட்பட தோட்டக்கலை பயிர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு, 

பேரீட்சை, அத்தி, ட்ராகன் புரூட், அவகேடா உட்பட தோட்டக்கலை பயிர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு 1000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடியை அதிகரிக்க பயிற்சி வழங்கி மகசூல் ஏற்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10 இலட்சம் வேளாண் குடும்பத்திற்கு அதற்கான பயிற்சி வழங்கப்படும். 

நுண்ணீர் பாசனம் மானியமாக்க ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்து, தண்ணீர் இல்லாத இடங்களில் சாகுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைக்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசியல்

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள 300 வேளாண் குடும்பத்திற்கு பழச்செடி தொகுப்புகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மா, பலா, கொய்யா பழக்கன்றுகள் வழங்கப்படும்.