மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 11 சவரன் நகையை பறித்த மர்ம நபர்கள்: காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு..!
மதுரை, நாராயணபுரம் அருகேயுள்ள பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி சுகுணா(46). இவர் மதுரை மாநகர வரதட்சணை தடுப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தனது பணிகளை முடித்த சுகுணா தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் காலனி சந்திப்பு அருகே அவர் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் சுகுணாவை பின் தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், அவரை வழிமறித்தனர்.
இதன் பின்னர், சுகுணா அணிந்திருந்த 11½ சவரன் தங்க நகையை பறித்துக் கொண்ட மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தல்லாகுளம் காவல் நிலையத்தில் சுகுணா புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உதவி ஆய்வாளரிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் மதுரை காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.