முக அழகிரியின் அறிவிப்பால் பதறிப்போன பிற கட்சியினர்!.



MK Alagiri anounced meeting in chennai

கருணாநிதி மறைவிற்கு பிறகு அவரது நினைவிடத்திற்கு சென்ற அழகிரி, உண்மையான உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறியதோடு செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையே மிரளும் அளவிற்கு பேரணி நடத்த முடிவு செய்து அதற்கான வேலையை செய்துவருகிறார்.

தனது வீட்டில் ஆதரவாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, என்னை திமுகவில் இணைக்கவில்லை என்றால் பேரணிக்கு பிறகு பின் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று முக அழகிரி தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது.

mk Azhagiri

மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த முக அழகிரி, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டால், சகோதரர் மு.க.ஸ்டாலினை தான் தலைவராக ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த அழகிரியிடம் பேரணியில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்களா என்று கேட்கபட்ட கேள்விக்கு நான் கலைஞரின் மகன் எனவே சொன்னதை செய்வேன் என்று கூறியதால் அனைத்துகட்சினரிடமும் அந்த பேரணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் பேசுகையில்  செப்டம்பர் 5ஆம் தேதி நடக்கும் அமைதிப் பேரணியில் ஆரவாரம் ஆர்ப்பாட்டத்திற்கு நமது தொண்டர்கள் யாரும் இடம் கொடுக்கக் கூடாது. காவல்துறை, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் தராமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.