எனக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி!. அதிர்ந்து போன திமுக!.
கடந்த 7ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நாள்தோறும் குடும்பத்தினர்களும் பொதுமக்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வந்து கொண்டிருக்கின்றனர்.
சற்றுமுன் அங்கு அஞ்சலி செலுத்த வந்த முக அழகிரி தனது குடும்பத்தினருடன் வந்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய இவர், என் தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது.
இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை என கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஸ்டாலின் தலைமையை விரும்பாத அழகிரி கருத்து தெரிவித்த காரணத்தால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆதரவு என்பது குடும்பத்திலா கட்சியிலா என்று கேட்கப்பட்டபோது இது கட்சி சார்ந்த ஒரு ஆதங்கமே என்று அழகிரி கூறியுள்ளார். நாளை நடைபெற உள்ள அவசர செயற்குழு பற்றி அவரிடம் கேட்டபோது நான் தற்போது திமுகவில் இல்லை அதனை பற்றி எதுவுமே எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் திமுக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக தெரிவு செய்யப்படவிருக்கிறார்