#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொண்டர்களின் வருகைக்கு பின் கடைசியாக சமாதிக்கு வந்த மகன், அதிர்ச்சியில் தொண்டர்கள்.!
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார்.
மேலும் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு பல்வேறு முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலகை சேர்ந்தவர்கள்,பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ,பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.பின் அரசமரியாதையுடன் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
ஆனால் கருணாநிதியின் முதல் மனைவியின் மகனாக மு.க.முத்து மட்டும் வராமலே இருந்தார்.ஏனெனில் சில காலங்களாக அவரது உடல்நிலை நலிவடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை மு.க முத்து தனது தந்தை கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.மேலும் அஞ்சலிக்கு பின்னர் சிறிது நேரம் சமாதியை பார்த்து கண்கலங்கியபடியே நின்றார்.
மேலும் அவரால் சரியாக நடக்க முடியாததால் சிலர் கைதாங்கலாக முத்துவை அழைத்து வந்தனர்.