மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்..! மருத்துவர் வெளியிட்ட அறிக்கை.!
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. அவர் நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன.
இதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அவருக்கு வைரல் ஃப்ளூ காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், முதலமைச்சர் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.