தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மாதச்சீட்டு கட்டுவது நல்லதா? உபயோகமானதா?..!
சேமிப்பு என்பது நமது வாழ்க்கை நடைமுறையில் தொன்றுதொட்டு பழக்கப்பட்டு வருவதாகும். என்னதான் எனக்கு ஓட்டைக்கை, என்னிடம் பணம் கொடுத்தால் நான் செலவழித்துவிடுவேன் என்று தெரிவித்தாலும், காலம் அவர்களை பக்குவப்படுத்தி அவர்களின் குணத்தை மாற்றிவிடும். என்ன அதற்கு சில வருடங்கள் ஆகும், அதுவரை அவர்கள் செலவளித்ததை கணக்கிட்டு ஒருநாள் வருந்துவார்கள்.
குழந்தைகளுக்கு சேமிப்பு தொடர்பான விஷயத்தை சிறு வயதில் இருந்தே பக்குவப்படுத்துவது மிகவும் நல்லது. நமது பெற்றோர்கள் நம்மிடம் கொடுத்த பணத்தை நோட்டு புத்தகத்தில் மறைத்து வைப்பது, உண்டியலில் சிறுகச்சிறுக சேர்ப்பது என சில பழக்கங்கள் நம்மிடையே இருந்தாலும், அவை காலத்தின் கட்டாயத்தால் கொஞ்சம் மாறி வருகிறது என்பது தான் கசப்பான உண்மை.
அந்த வகையில், சீட்டு பணம் கேட்டுவது என்பது இன்றளவில் பரவலாக இருந்து வருகிறது. இவற்றில், மாதச்சீட்டு, வாராந்திர ஏலச்சீட்டு, குழுக்கல் சீட்டு, தள்ளுபடி சீட்டு என அவரவரின் தகுதி மற்றும் தேவைக்கேற்ப பணத்தை மற்றொரு நபரின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களிடம் கொடுத்து சேமித்து வருகின்றனர். பல நேரங்களில் சீட்டு போட்ட மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு பட்டை நாமம் போட்டுச்சென்ற சம்பவமும் உள்ளது.
மாதச்சீட்டு கட்டுவது இலாபமா? என்று கேட்டால், மாதச்சீட்டு கட்டும் நபர்கள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர் என முதலில் நினைக்க வேண்டும். இதில் சேமிப்பு விபரத்தை பார்த்தால், வியாபாரம் செய்யவில்லை சேமிப்பு செய்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும்.
பொதுவாக, வியாபாரம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கான எண்ணத்துடன் இருப்பவர்கள் மாதச்சீட்டு கட்டுவதை தவிர்க்க நினைப்பார்கள். அவ்வாறாக கட்டினாலும் அதனை விரைவில் எடுக்கவே முயற்சி செய்வார்கள். சேமிப்பு செய்பவர்கள் வியாபாரம் செய்ய மாட்டார்கள். வியாபாரம் செய்பவர்கள் மாதச்சீட்டு சேமிக்க மாட்டார்கள். குடும்ப தலைவிகள் மாதச்சீட்டு கட்டுவது இலாபத்தில் தான் முடியும்.
எந்த சீட்டாக இருந்தாலும் உங்களின் பணத்தையே பெரும்பாலும் சேமிக்க கொடுத்து வைக்கிறீர்கள். அவர்கள் ஏமாற்றி செல்லாத வரை அனைத்தும் நல்லதே. வங்கிகளிலும், தபால் நிலையத்திலும் சேமிப்பு கணக்குகள் உள்ளன என்பவை குறிப்பிடத்தக்கது.