மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமியார் வீட்டிற்கு மருமகன் விருந்து செல்வதற்கு பின்னால், இப்படியொரு அசரவைக்கும் பாசப்பிணைப்பு.!
தமிழ் உறவுமுறைகளில் பல்வேறு ஆழமான அர்த்தங்கள் உள்ளது. அவை இன்றளவில் பல்வேறு சூழ்நிலையால் சிதைந்து வருகிறது. மேலும், அதன் அர்த்தமும் இன்றுள்ளோருக்கு தெரிவது இல்லை. நுனிப்புல் மேய்ந்தவர்கள் பலரும் அதனை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்து வருவது தான் இன்றைய காலத்தின் பரிசோ?.
திருமணம் முடிந்ததும் பொதுவாக புதுமண தம்பதிகள் இருவரும், அவரவர் சமூக முறைப்படி ஆண் - பெண் வீட்டில் உள்ள உறவினர்களின் இல்லங்களுக்கு விருந்துக்கு சென்று வருவார்கள். அது எதற்கு என்பதை இன்று காணலாம்.
திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள், அவர்களுக்கு வரன் பார்க்கும் படலத்தில் தான் சந்தித்து இருப்பார்கள். ஆதலால், அவர்கள் திருமணத்திற்கு முன்னர் பெரிதளவில் பேச வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அதனைப்போல தங்களின் சொந்தங்கள், அவர்கள் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதனை உணர்த்தும் பொருட்டே, திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு விருந்துக்கு செல்கிறார்கள். அங்கு மணமகனுக்கு உணர்த்தப்படும் மறைமுக மந்திரம், எங்களது வீட்டு பிள்ளை இதனைப்போல சுவையாக சாப்பிட்டு வளர்ந்தவள். அவளுக்கு உன்னால் இயன்றதை அன்போடு கொடு என்பதை உணர்த்தத்தான்.
மாமியாரின் வீட்டிற்கு மருமகன் வந்தால், அன்று மாமியாருக்கு பெரும்பாலும் ஓய்வு கிடைக்காது. தனது அன்பிற்கினிய மகளும், அவரின் கணவரும் போதும்போதும் என்று கூறும் அளவு சாதனைகளை ருசியாக சமைத்து, இன்முகத்தோடு பரிமாறுவார்கள். என் மகள் உனக்கு எப்படியோ, எனக்கு அவள் ராணி. என் ராணி இப்படித்தான் சாப்பிடுவர். அவளை அன்போடு பார்த்துக்கொள் என்பதை உணர்த்தவே அனைத்தும் அன்றைய நாட்களில் நடத்தப்பட்டது.