திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மதுரை அருகே தெரு நாயை கம்பியால் தாக்கி இழுத்து சென்ற நபர் கைது...
மதுரை மாவட்டம் உலக தமிழ் நகர் அருகே உள்ள கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் அதே பகுதியில் சுற்றி திரிந்த நாய் ஒன்றினை கம்பியால் கடுமையாக தாக்கி அதனை நடு ரோட்டில் இழுத்து சென்றுள்ளார்.
இதனை பார்த்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து விலங்குகள் நல வாரிய பிரதிநிதி முருகேஸ்வரி என்பவருக்கு அனுப்பியுள்ளார். உடனே முருகேஸ்வரி வீடியோ ஆதாரத்தை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காட்டி புகார் அளித்துள்ளார்.
புகாரை விசாரித்த காவல் துறையினர் பழனியப்பனை விலங்குகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாயை துன்புறுத்தி தாக்கி கொடுமைப் படுத்திய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.