மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. பதறவைக்கும் சம்பவம்..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே தொட்டியம், பாலசமுத்திரத்தில் அரசுபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் மெவுலீஸ்வரன் (வயது 15).
பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சக மாணவர்கள் தாக்கி மெவுலீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மாணவரின் மரணம் தொடர்பாக உறவினர்களுக்கு தெரியவரவே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து திருச்சி மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.