#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகளின் திருமணத்திற்காக பரோலில் வெளிவந்த நளினிக்கு இப்படியொரு துயரமா? கடும் சோகத்தில் குடும்பத்தினர்!!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நளினி தனது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில் நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து அவர் பரோலில் வெளியே வந்தநிலையில் அவரது மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து வேலூருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. மேலும் பரோல் வழங்கிய நேரம் ஆடி மாதம் என்பதால் ஹரித்ரா திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. இதனால் நளினி மிகவும் துயரம் அடைந்துள்ளார்.
மேலும் தாய் மற்றும் தந்தை சிறையில் இருந்து விடுதலையான பின்புதான் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் நளினியின் மகள் ஹரித்ரா அறிவித்துள்ளார். இந்நிலையில் நளினியின் பரோல் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்து அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.