தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஒரு எச்சரிக்கை அறிவிப்பு.!
ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து நன்றாக வாகனம் ஓட்டுபவர் என்பதற்கான அத்தாச்சி வாகன ஓட்டுனர் உரிமம் ஆகும். மேலும் அவருக்கு போக்குவரத்து சாலை விதிமுறைகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டுனர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு 6 மாதங்களுக்கு செல்லுபடி ஆகும்படி பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் இந்த பழகுநர் உரிமத்தை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெற கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும் பழகுநர் உரிமத்தை பெறுபவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு புதுப்பிக்க தவறி விடுவதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் மற்றும் செல்போன் மூலமாக ஓட்டுனர் உரிமம் தேர்வு குறித்து அறிவிப்பு தரப்படும் என்றும் ஓட்டுனர் உரிமம் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மீறினால் மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.