திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயோ பாவம்... இளம் பெண் தற்கொலை... காவல்துறை தீவிர விசாரணை.!
திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் முடிந்த பத்து மாதங்களிலேயே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமாயி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாள் முதலலே கணவன் மற்றும் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராமாயி நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 10 மாதங்களிலேயே இளம் பெண் தற்கொலை செய்திருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.