திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நெய்வேலியில், பாதுகாப்புக்கு வந்த காவல் துறை வாகனம் தீ வைத்து எரிப்பு... பரபரப்பு சம்பவம்..!!
பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரின் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், வாகனத்தின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தி, சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியுள்ளது, நெய்வேலி என்எல்சி நிறுவனம்.
இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனால் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்திலிருந்து பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர்கள் நெய்வேலி வடக்குத்து பகுதியில் இருக்கும் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், காவலர்கள் வந்த அதிவிரைவுப்படை வாகனம் இன்று காலை திடீரென தீப்பிடித்து எறிந்தது. உடனே தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீயை சம்பவ இடத்திற்கு வந்து அணைத்தனர். இந்நிலையில் வாகனத்தின் முன் பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறை, வாகனத்திற்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு வந்த காவல்துறையினர், வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.