#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காலாண்டு தேர்வு விடுமுறைகள் ரத்தா? பள்ளி கல்வி துறை என்ன கூறுகிறது? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி வரும் செப்டம்பர் இருபத்தி மூன்றாம் தேதி முடிவடைய உள்ளது. காலாண்டு தேர்வுகள் முடிவடைந்ததும் அணைத்து பள்ளிகளுக்கும் சில நாட்கள் விடுமுறை வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை காந்தியின் 150ஆவது பிறந்த தினம் வருவதால் விடுமுறை ரத்து செய்யப்பட்ட உள்ளது என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவியது.
காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அணைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்ட இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் தகவல் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது எனவும் அறிவித்துள்ளது.
மேலும், காந்திய சிந்தனைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக்கொள்ளலாம் எனவும், மாணவர்கள் விருப்பம் இருந்தால் அதில் பங்கேற்கலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.