மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆவி பிடித்த மாணவிக்கு நொடியில் நேர்ந்த சோகம்; மூச்சுத்திணறி பலியான பரிதாபம்..! சளித்தொல்லைக்கு ஆவி பிடிப்போர் கவனம்.!
சளித்தொல்லை நீங்குவதற்கு சூடான நீரில் மருந்து சேர்த்து ஆவி பிடித்த மாணவி பரிதாபமாக மரணமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி கௌசல்யா. இவர் அங்குள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாட்காகவே சளித்தொல்லை இருந்து வந்ததாக தெரியவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கௌசல்யா, நேற்று வெந்நீரில் மருந்து சேர்த்து ஆவி பிடித்துள்ளார்.
அதன்போது, அவருக்கு எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறல் ஏற்பட, மாணவி சூடாக இருந்த பாத்திரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.