மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பால் பாக்கெட்டில் செத்து மிதந்த 'ஈ': பதறியடித்து ஓடி வந்த ஆவின் நிறுவன அதிகாரிகள்..!
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது ஆவின் எனும் வணிகப்பெயரால் அழைக்கப்படுகிறது.
மதுரை ஆவின் நிறுவனம் சார்பில், விநியோகிக்கப்படும் எஸ்.எம், பச்சை நிற பால் பாக்கெட் ஒன்றை பல்கலைநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வாங்கியுள்ளார். அப்போது அந்த பாக்கெட்டிற்குள், 'ஈ' இறந்து மிதந்து கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் அந்த பாக்கெட்டை டெப்போவில் திருப்பி ஒப்படைத்தார். இது குறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போவிற்கு வந்த ஆவின் நிறுவன அதிகாரிகள், அந்த பாக்கெட்டை பெற்றுக் கொண்டதுடன், 'சம்பந்தப்பட்ட பாக்கெட் குறித்த வீடியோ, போட்டோ இருந்தால் வெளியிட வேண்டாம்' என, டெப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி விட்டு சென்றனர். பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.