சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அடக்கடவுளே.. உழவு பணியின் போது நேர்ந்த விபரீதம்... தலை குப்புற டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுனர் பலி... கதறும் குடும்பத்தினர்..!

வயலில் உழவுப் பணியின் போது தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் ஓட்டுனர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சோனைமுத்து. இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அப்பகுதியில் இருக்கும் வயலில் டிராக்டர் மூலம் உழவு ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார் சோனைமுத்து. அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில் சோனைமுத்து படுகாயம் அடைந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சோனைமுத்துவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோனைமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.