#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே!! காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடம்பூர் மலைப்பகுதி ஏலஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.
சம்பவத்தன்று பழனிச்சாமி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் குன்றி மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அஞ்சனை பிரிவு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாமரத்து பள்ளம் பிரிவு அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்த ஒற்றைக் காட்டு யானை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சாலையில் அவர்கள் முன் வந்து நின்றது.
இதனை கண்டு திகைத்துப் போன பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்ற போது அந்த காட்டு யானை ஆனது அவர்களை துரத்தி தாக்கியதில் பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது