மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு தலை காதல்.. இளம் பெண்ணின் வீட்டில் புகுந்த இளைஞர் செய்த செயல்!
திருத்தணி அருகே இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தகராறு செய்த சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருக்கு 20 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயதான பாலாஜி என்ற இளைஞர், ஜெயந்தியின் மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மேலும், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியும் வந்துள்ளார். ஆனால் இதற்கு ஜெயந்தியின் மகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஜெயந்தி மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்தபோது அங்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட ஜெயந்தியை கெட்ட வார்த்தைகளால் அந்த இளைஞர் திட்டியுள்ளார். மேலும் எனது வழியில் குறுக்கே வந்தால் அடித்து கொலை செய்தவன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து ஜெயந்தி திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலாஜியை தயவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.