அதிகரித்துவரும் வெங்காய விலை! ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை.! அமைச்சர் தகவல்
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால் வெங்காயத்தில் விலை கடந்த சில வாரங்களாக அதிரித்து வருகிறது. சமீபத்தில் ஒருகிலோ சின்ன வெங்காயம் கிலோ 100 ருபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், இந்த வெங்காய விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில் மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது. மேலும் இந்த விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த 32,982 ரேஷன் கடைகள் மூலம் பெரிய வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.