மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் சூதாட்டம்.. உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்... தொடரும் சூதாட்ட அவலம்..!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு இளைஞர்கள் பல ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் சிலர் தங்களது பணத்தை இதில் இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் பொள்ளாச்சி அருகே நடந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவிரக்த்தியில் இருந்த சல்மான் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் சல்மான் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சல்மான் இறப்பிற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.