உஷார்.. ஆன்லைன் ஷாப்பிங்-ஆல் ஆபத்தா?.. இனிமே இப்படிலாம் பண்ணாதீங்க..!! பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்..!!



Online purchase danger

இன்றைய காலகட்டத்தில் பருப்பு முதல் லேப்டாப் வரை அனைத்தையும் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறையாவது பெரும் தள்ளுபடி பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொள்கிறன. 

தள்ளுபடி என போட்டதும் சிலர் தேவையே இல்லை என்றாலும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை என்பது மாறி தற்போது தினமும் எதையாவது ஆடர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் தள்ளுபடிக்காகவும் காத்திருக்கின்றனர். 

tamilnadu

பொருட்கள் வாங்கவில்லை என்றாலும்கூட ஷாப்பிங் தளத்திற்கு செல்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் ஆவது தினமும் அந்த இணையதளத்தில் செலவிடுகின்றனர். இந்த மனநிலையை (buying-shopping disorder) ஒருவிதமான குறைபாடு என்று ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல் எச்சரிக்கிறது.

இதனால் குடும்பத்தின் அமைதி சீர்குலைந்து பொருளாதார ரீதியாக பெரும்சரிவை சந்திக்ககூடும் என்றும் எச்சரிக்கை செய்கிறது. இதனால் மக்கள் பலரும் தேவையில்லாமல் இணையதளபக்கத்திற்கு சென்று ஆர்டர் செய்வதை தவிர்க்கவேண்டும். தங்களுக்கு தேவையானபொருட்கள் வேண்டுமென்றால் அப்போது மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.