வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
திமுகவின் சகாப்தம் முடிவு.! புதிய மாவட்டமாகும் பழனி.! முதலமைச்சர் அறிவிப்பு.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார்.
இந்தநிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் முன்பு பேசிய முதலமைச்சர், திமுக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிமுக கூட்டணியே வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலோடு திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வரும்.
தைப்பூச திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை எனக்கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்துள்ளனர் என பேசினார்.