மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'நாங்களும் ரவுடிதான்' சினிமா பாணியில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள் கைது.!
பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி ரகளை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குண்டியாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் கார்த்திக், உத்திரமேரூர் அடுத்த கருவேப்பும் நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் அரவிந்தன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மதுபோதையில் நாங்களும் ரவுடிதான் என்று திரைப்பட பாணியில் நடுரோட்டில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தட்டிக் கேட்ட பொது மக்களிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டலும் எடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கையில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் மீது வீசியுள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.