மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்கள்: போலீசாரின் அதிரடி! சிக்கியவர்கள் எத்தனைபேர்.?
கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ்,வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. கொரானாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து, பலி எண்ணிக்கை 100-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், கொரோனா பரவல் சற்று அதிகமாகி வருகிறது.
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், தேவையற்ற முறையில் வாகனத்தில் பயணித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்கவைத்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் மொத்தம் 58,440 வழக்குகளைப் பதிவு செய்து 64,733 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 48,945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.