மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரல் வீடியோவால் போலீசார் அதிர்ச்சி: ஊற்றி கொடுத்த 6 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு..!
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பெட்டமுகிளாலம் கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி (10). 10 வயதில் அந்த சிறுமி மது அருந்தியது போலவும், பீடியை பற்ற வைத்து புகைப்பது போலவும், பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலை தளங்களிலும் ஒரு வீடியோ வைரலாக பரவிவந்தது.
இந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சிறுமிக்கு இளைஞர்கள் சிலர் குடி போதயில், கிளாஸில் மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததுடன், பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரியான சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி பற்ற வைத்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு: - சங்கையா (22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26) மற்றும் அழகப்பன் (26) ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளதாகவும், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருவதாகவும் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.