மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"முகத்தை உடைச்சிருவேன்" - யூடியூப் செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிடிஎப் வாசனுக்கு எதிராக வழக்குப்பதிவு.! காவல் துறையினர் நடவடிக்கை.!
ரூ.45 ஆயிரம் வாங்கிக்கொண்டு டிடிஎப் வாசனை யூடியூபர் அவதூறாக பேச பணம் வாங்கியதாக வீடியோ வெளியாகி, டிடிஎப் கோபமடைந்து பேசி வழக்கை வாங்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இருசக்கர வாகன பயணத்தை வீடியோ எடுத்து பதிவிட்டு, இளம் தலைமுறையான 2கே கிட்ஸிடையே புகழ்பெற்றவர் வாசன் என்ற டிடிஎப் வாசன்.
இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் செய்த தனியார் யூடியூப் சேனல் செய்தியாளர், சரமாரியான கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், மதன் ரவிச்சந்திரன் என்பவர் வெளியிட்ட பிரத்தியேக வீடியோ ஒன்றில், டிடிஎப் வாசனை அவதூறாக பேச ரூ.45 ஆயிரம் பணத்தை பத்திரிகையாளர் பெற்ற காட்சிகள் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
இந்த விடியோவை கண்டு ஆத்திரமடைந்த டிடிஎப் வாசன், "தனியார் யூடியூப் சேனல் பத்திரிகையாளரை குறிப்பிட்டு, தரக்குறைவாக விமர்சித்து இருந்தார். மேலும், நேரில் சிக்கிவிடாதே, உன்னை அடித்து முகத்தை உடைத்துவிடுவேன்" என கோபத்தில் பேசியிருந்தார்.
இதுகுறித்த வீடியோ செய்தியாளரை கிண்டல் செய்தவர்களிடம் சிக்கி வைரலானது. இந்நிலையில், யூடியூப் சேனல் பத்திரிக்கையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கோவை காவல் நிலையத்தில் டிடிஎப் வாசனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.