#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பணியின்போது இறந்த தலைமை காவலர்! காவலரின் உடலை தோளில் சுமந்த இன்ஸ்பெக்டர்!
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48) எ ன்பவர்,எல்லை பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பெங்களூருவில் பணி புரிந்து வந்தார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்ய லட்சுமி என்ற மகளும் முத்தையா முரளிதரன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் தலைமை காவலர் உதயகுமார் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறந்த உதயகுமாரின் உடல் சொந்த ஊரான பணகுடிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து பணகுடியில் உதயகுமாரின் உடலுக்கு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பணகுடியில் உள்ள சுடுகாட்டிற்கு இன்ஸ்பெக்டர் உட்பட உதயகுமாரின் உடலை சுமந்து சென்றனர். அங்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உதயகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.