திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யாருடா நீங்க?.. பட்டப்பகலில் அசால்ட்டாக இருசக்கர வாகனம் திருட்டு.. அதிர்ச்சியை தரும் சம்பவம்.!!
முக்கிய பிரதான சாலையில் அசால்டாக இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பூவிருந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பூவிருந்தமல்லியில் உள்ள எலக்ட்ரீசியன் கடை ஒன்றில், தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது தனது இரு சக்கர வாகனத்தை கடையின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்ற நிலையில், வெளியே வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து கடை வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் மூலம் அவர் ஆய்வு செய்ததில், ஒரு மர்ம நபர் தலையை கோதிக்கொண்டு தனது சொந்த வண்டியை எடுத்துக் கொண்டு செல்வது போலவே, அசால்ட்டாக இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கமலக்கண்ணன் இதுகுறித்து உடனடியாக பூவிருந்தமல்லி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் பூவிருந்தமல்லி போன்ற முக்கிய பிரதான சாலையில், இருசக்கர வாகனத்தை ஒரு மர்ம நபர் பட்டப்பகலில், அதிக ஆள் நடமாட்டம் காணப்படும் இடத்தில் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.