படிக்கட்டாக மாறிய காவல்துறை... ரயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய காவலர்களை நாமும் பரட்டலாமே !!!



Policemen helped pregnant lady

சென்னை, நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி நடந்து செல்ல தொடங்கினர்.

chennai

அப்போது அமுதா என்ற கர்ப்பிணி பெண்ணும் கீழே இறங்க முயற்சித்தார். நடைமேடை இல்லை என்பதாலும், படிக்கட்டுகள் உயரமாக இருந்ததாலும் அமுதாவால் இறங்க முடியவில்லை. வெகுநேரம் எப்படி ரயிலை விட்டு இறங்குவது என தெரியாமல் தவித்தார். இப்படியே 2 மணி நேரம் ஆகிவிட்டது. அமுதாவால் கடைசிவரை கீழே இறங்கவே முடியவில்லை. அப்போது போலீசார் இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்களது பெயர் தனசேகர், மணிகண்டன். அமுதா கீழே இறங்க முடியாமல் தடுமாறி கொண்டிருப்பதை கண்ட அவர்கள், திடீரென ரயிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு போல குனிந்து நின்றனர்.

இப்போது அமுதாவை தங்கள் மீது கால்வைத்து கீழே இறங்குமாறு சொன்னார்கள். அமுதாவும் ஒரு சிறு தயக்கத்திற்கு பின்னர், தன் கால்களை போலீசார் இருவரின் முதுகுகளின் மீது வைத்து கீழே இறங்கினார். இதேபோல், முதியவர்கள் கீழே இறங்கவும் காவலர்கள் உதவி செய்தனர். காவலர்களின் மனித நேயத்துக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தக்க சமயத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு அமுதா மற்றும் முதியவர்களுக்கு உதவிய போலீஸ்காரர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தனர்.