மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூஜை வைத்து சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி: காவல் நிலையத்தில் வைத்து பூஜை நடத்திய பெண் போலீசார்..!
10 ஆம் வகுப்பு மாணவியை கர்பமாக்கிய பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு மாணவி ஒருவரின் கடுமையான வயிற்றுவலியை சிறப்பு பூஜை செய்து குணப்படுத்துவதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய கோயில் பூசாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி (15). இவருக்கு தொடர்ச்சியா வயிற்று வலி பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த ஊராளி கருப்பர் கோயில் பூசாரி பழனி (65). இவர் சிறுமியின் தாயாரிடம், சிறப்பு பூஜை மூலம் வயிற்று வலியை குணப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய சிறுமியின் தாய், சிறுமியை பூசாரியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்துவிட்டு, வீட்டிற்குள் தான் குறி பார்க்கும் அறையில் சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது 3 மாதம் கழிந்த நிலையில் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி பழனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.