#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண் மருத்துவரை கதற கதற., கத்திமுனையில் கூட்டு பாலியல் பலாத்காரம்.. வேலூரில் பயங்கரம்.!
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததற்காக காவல்துறையினர், 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதியன்று தனது நண்பருடன் காட்பாடியில் உள்ள தியேட்டரில் இரவுக்காட்சி படம் பார்க்க சென்ற நிலையில், படம் முடிந்தபின் நள்ளிரவு 12 மணியளவில் ஆட்டோக்காக இருவரும் காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஆட்டோ ஓட்டுநர் எங்கே செல்லவேண்டும்? என்று கேட்டுள்ளார். அதற்கு இருவரும் நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், ஆட்டோவில் முன்பே மூன்று பேர் இருந்ததால் ஷேர் ஆட்டோ என நினைத்து ஏறியுள்ளனர்.ஆனால், காம வெறிபிடித்தவர்களோ ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி, கத்திமுனையில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் இருவரிடமும் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் இந்த விஷயம் தொடர்பாக கடந்த 22ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் இரண்டு சிறார்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் படி, ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டு கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பார்த்திபன், பரத் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.