மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருந்து ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதவித்த பொதுமக்கள்.!
பொள்ளாச்சியை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கு, கோட்டூர் மார்க்கமாக பல்வேறு கிளை கிராமங்களுக்கு தமிழக அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது
அந்த பகுதியில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் திடீரென்று பழுதானால், ஸ்பேர் பஸ் என்று அழைக்கப்படும் தமிழக அரசின் மாற்று பேருந்துகள் அந்த வழித்தடத்தில் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், மயிலாடுதுறை, ஆனைமலை, பொங்காளியூர் போன்ற பகுதிகளின் வழியாக செல்லும் 29 ஆம் எண் கொண்ட ஒரு மாற்று பேருந்து கோட்டூர் வழியாக சென்றுள்ளது. மதுரைக்கு செல்லும் பேருந்தில் மாற்று வழித்தடத்தின் பெயர் பலகையை மாற்றி பேருந்தை ஓட்டுநர்கள் இயக்கியதாக தெரிகிறது. இதனிடையே பேருந்தில் இருந்த பெயர் பலகை பேருந்தில் ஏற்பட்ட அதிர்வுகளால் கீழே இறங்கியுள்ளது. இதனை பேருந்தில் பணியாற்றி வந்த ஓட்டுநரோ அல்லது நடத்துனரோ கவனிக்கவில்லை. இந்நிலையில்தான் தென் சங்கம்பாளையம் மார்க்கமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து அங்கே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் இது தங்களுக்கான பேருந்து இல்லை என்று கவனக்குறைவாக இருந்ததாக தெரிகிறது.
அதன் பிறகு பேருந்தில் பெயர் பலகை சரியாக இல்லாததை அந்த பகுதியில் இருந்த மக்கள் சுட்டிக் காட்டியதை தொடர்ந்து, பெயர் பலகையை நடத்துனர் சரி செய்துள்ளார். இதற்கிடையே கோட்டூர் வழியாக மதுரை பேருந்து வருகை தந்ததால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அந்த வழித்தடத்தில் எப்போதும் இயக்கப்படும் ஒரு சில மாற்று பேருந்துகள் மாறி, மாறி இயக்கப்படுவதால், பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது என்றும் கூறப்படுகிறது