பொதுமக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறை முக்கிய அங்கம்! இந்த சமயத்தில் பொதுமக்கள் செய்யவேண்டியது!



Public cooperation to government

நாட்டின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் காவல்துறை மிக உறுதுணையாக இருந்து வருகிறது. சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம், வர்தா புயல், டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்ட கஜா புயல் போன்றவற்றில் காவல்துறையின் பங்களிப்பு எண்ணிலடங்காதது. சில காவலர்களுக்கு 24மணி நேரம் கூட பணியில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படும்.

காவல்துறையினர் மிக விழிப்புடன் செயல்படுவதால் தான் பல குற்றங்கள் குறைந்துள்ளன. காவல்துறை பணி என்பது மிகவும் சவாலான பணிதான். வெயில், மழை, இடி, மின்னல் என எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களின் நலனுக்காக பணி செய்பவர்கள் காவல்துறையினர். இந்த கொரோனா சமயத்தில் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

police

இந்த கொரோனா சமயத்தில் 100 நாட்களுக்கும் மேலாக இரவும் பகலுமாக   அவர்களின் குடும்பத்தை விட்டு விட்டு மக்களுக்காக  ரோட்டில் நின்று சேவை செய்து வருகின்றனர். ஆனால், யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த காவல்துறையை தவறாக பேசி இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ஆனால் உண்மையிலே மக்களுக்காக உழைக்கும் போலீசார்களுக்கு, இது போன்ற செயல் மனவேதனை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்து, யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த துறையையும் தவறாக பேசி ட்ரெண்ட் செய்யவேண்டாம் என தன்னார்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர். இந்த ஊரடங்கு சமயத்தில் சமூக விலகலை கடைபிடித்து கொரோனாவை விரைவில் விரட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பாக இருப்போம்.