மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு.. வஞ்சக எண்ணம் கொண்டோரால் தவிக்கும் குடும்பம்.!
வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு செல்லும் பாதையை அருகிலிருந்தவர்கள் அடைத்த நிலையில், 5 நாட்களாக வெளியே வரமுடியாமல் வீட்டில் வசிப்பவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகாமையில் குண்டகவயல் கிராமத்தில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விஜி. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தை உள்ள நிலையில், அவரது தாயும் இவர்களுடன் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர்களது வீட்டிலிருந்து மெயின ரோட்டிற்கு செல்லும் வழியினை, அப்பகுதியில் உள்ளவர்கள் கொட்டகை போட்டு அடைத்துள்ளனர். இதனால் கோபமுற்ற ராமகிருஷ்ணன் அவர்களிடம் சண்டையிட்ட நிலையில், இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
இதனால் வருவாய்த்துறை இவர்கள் செல்வதற்கு மாற்று பாதையை அமைத்துக் கொடுத்த நிலையில், தற்போது அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையையும் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக அருகாமையில் உள்ளவர்கள் அடைத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த வீட்டில் வசிக்கும் நால்வரும், கடந்த ஐந்து நாட்களாக வெளியே வர முடியாமல் தவிர்த்துள்ளனர். இதனை இப்படியே விட்டால் சரிவராது என எண்ணிய ராமகிருஷ்ணன் இதுகுறித்து மீண்டும் புகார் அளித்துள்ளார்.
மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தாங்கள் வெளியேறுவதற்காக பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.