மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாதாரண கிராமத்தில் பிறந்து சாதித்து காட்டிய புதுக்கோட்டை மாணவி! குவிந்துவரும் பாராட்டுக்கள்!
இந்திய அளவில் நடைபெற்ற சித்தா முதுகலை தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் முதலிடம் பிடித்து சாதித்து காட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். என்பவரின் மகள் பொன்மணி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பில் பொன்மணி 1200-க்கு 1,062 மதிப்பெண்கள் பெற்று சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்) படித்தார். இதனையடுத்து முதுநிலை பட்டத்திற்கான தேர்வை எழுதினார்.
இந்நிலையில் இந்திய மருத்துவக் கல்விக்காக நடைபெற்ற நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் முதலிடம் பெற்று சாதித்து காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீட் தேர்விற்கான முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் 400-க்கு 377 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளேன், இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, சென்னை தாம்பரத்தில் இருக்கும் தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேல்படிப்பு படிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.