மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொகுசு காரில் கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர் அதிரடி கைது.. நடந்த சம்பவம்.!
அரசு ஊழியராக பணியாற்றிக்கொண்டு, பகுதியாக மறைமுக கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட அதிகாரி கைதாகினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, வல்லத்திராக்கோட்டை பகுதியில் காவல் துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சொகுசு காரை இடைநிறுத்தி விசாரித்துள்ளனர்.
காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் கொண்ட காவல் துறையினர், காரில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது அம்பலமானது.
இதனையடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி வர்மா, சூரிய பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா கடத்தல் நடந்தது அம்பலமானது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் கடத்திய கஞ்சா, கடத்தலுக்கு உபயோகம் செய்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.