திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரயில் முன் பாய்ந்து 27 வயது இளைஞர் தற்கொலை; பயணிகள் கண்முன் இரயில் நிலையத்தில் பயங்கரம்.!
பயணிகளின் கண்முன்னே இளைஞர் தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர், வீரப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 27). இவர் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், உத்தமர் கோவில் இரயில் நிலையத்திற்கு வந்த விஜயகுமார், மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு விஜயகுமார் உயிரிழந்தார். இதனை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோக, இதுகுறித்த தகவல் திருச்சி இரயில்வே காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.