பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து ரகளை.. ரேஷன் கடை அரசு ஊழியர் வீடுபுகுந்து பயங்கரம்.. வெளுத்தெடுத்த பொதுமக்கள்..!



puthuvannarapetai-girl-abusing-issue

மாதம் ரூ.40 ஆயிரம் கவர்மெண்ட் சம்பளம் வாங்குகிறேன் போதுமா? என கேட்டு பெண்ணின் கையை பிடித்து இழுத்த அரசு ஊழியரை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வாசர் வரதப்ப மேஸ்திரி தெருவில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் வீட்டிற்கு அருகாமையில் வாடகைக்கு வசித்து வரும் நிலையில், தனது பெயருக்கு குடும்ப அட்டை கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

இதனால் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சுனாமி குடியிருப்பு உணவு பொருள் வழங்கல் அலுவலகத்தில் இருந்து 45 வயதான அயாத் பாஷா என்பவர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தங்களது ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் எனக்கூறி கேஸ் பில் போன்றவற்றை கேட்டுள்ளார்.

அப்போது இளம்பெண் அவரிடம் ஆவணங்களை கொடுத்த போது, தான் ஒரு அரசு ஊழியர் எனவும், மாதம் ரூ.40,000 கவர்மெண்ட் சம்பளம் வாங்குகிறேன் சம்மதமா? என கூறி உடனடியாக பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

chennai

இதனால் அந்தப் பெண் அரசு ஊழியரின் கன்னத்தில் பளாரென அறைந்த நிலையில் கத்தி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

அத்துடன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதால் போவார், வருவார் என அனைவரது காலிலும் விழுந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.