மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா, சிவாவிற்கு கூறிய வாழ்த்து!
நடிகர் சிவகார்த்திகேயன் "அயலான்" மற்றும் ""டாக்டர்" திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று. இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17, 1985ம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர் ஆவார். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவக்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார்.
விஜய் டிவியில் இருந்து பல திறமையானவர்கள் சினிமாவுக்கு முன்னேறி உள்ளனர். அதில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகப்பெரியது. இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy birthday @Siva_Kartikeyan have a good one❤️❤️❤️ pic.twitter.com/ETbABpjubn
— Radikaa Sarathkumar (@realradikaa) February 17, 2020
பிரபல சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ராதிகா, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமார். இந்தநிலையில் ராதிகா சிவாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே மை க்யூட்டி என வாழ்த்தியுள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
Happy birthday my cutie @Siva_Kartikeyan ! We all love you for who you are :) Onwards and upwards always 🤗 pic.twitter.com/kyffba3ND9
— Anirudh Ravichander (@anirudhofficial) February 17, 2020