திருமணம் ஆன 4 மாதத்தில் கணவருடன் சண்டை.! வீட்டை விட்டு வெளியேறிய புதுமணப்பெண் பாதி வழியில் தவிப்பு.! ரயில்வே போலீசார் மீட்பு.!



railway police meet young women

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக சங்கீதா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்வதற்காக திண்டுக்கல்லில்இருந்து ரயிலில் புறப்பட்டுள்ளார். ரயிலில் ஏறி சற்று நேரத்தில் கணவன் மீது இருந்த கோபம் தனிந்து மனம்மாறியுள்ளார். இதனையடுத்து அவர் சென்ற ரயில் இரவு 10 மணியளவில் திருச்சிக்கு வந்தபோது அதிலிருந்து சங்கீதா இறங்கியுள்ளார். 

ஆனால் மீண்டும் திண்டுக்கல் செல்வதற்கு ரயில் இல்லாததால் சங்கீதா நீண்ட நேரம் ரயில்வே நடைமேடையில் நின்றுகொண்டிருந்துள்ளார். அங்கு பதட்டமாக நின்றுகொண்டிருந்த சங்கீதாவை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே போலீசார் சங்கீதாவை மீட்டனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கணவரிடம் சண்டைப்போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதும், பின்னர் மனம் மாறி மீண்டும் வீட்டுக்கே செல்ல முயற்சித்தும் என அனைத்தையும் சங்கீதா கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸ் தரப்பில் இருந்து சங்கீதாவின் கணவர் யுவராஜிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த யுவராஜ் தனது மனைவி சங்கீதாவை மீட்டு கொடுத்த ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது மனைவியை சமாதானபடுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.