சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
16 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழை! வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளான வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, ஆவடி போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.
இதனை தொடர்ந்து, 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, ராணிப்பேட்டையில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும்.
மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.