#BigBreaking: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 தமிழர்களின் விடுதலையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.. நளினி உட்பட அனைவரும் ரிலீஸ்.! 



rajiv-gandhi-murder-case-6-release-confirms-by-supreme

 

பேரறிவாளனை தொடர்ந்து 6 தமிழர்களின் விடுதலையை உறுதி செய்தது டெல்லி உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. 

Rajiv gandhi

உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் என பல முயற்சிகளை ஆண்டுக்கணக்கில் மேற்கொண்டு வந்ததன் எதிரொலியாக முதலில் பேரறிவாளன் ஜாமினில் வெளியே அனுப்பப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிடப்பட்டது.

Rajiv gandhi

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உட்பட பிற ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள காரணத்தால், அதே உத்தரவு நளினி உட்பட ஆறு பேருக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.