மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இராமநாதபுரம்: கத்திமுனையில் சிறுமியை காதலிக்க வற்புறுத்திய 3 வாலிபர்கள்.. வீடு புகுந்து துணிகர செயல்..!
கத்தி முனையில் சிறுமியை காதலிக்க வற்புறுத்திய 3 வாலிபர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இதே கிராமத்தில் வசித்து வரும் இளைஞர்கள் கலை குமார் (வயது 19), முகேஷ் (வயது 21), அஜய் (வயது 19).
12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியை, மேற்கூறிய 3 பேரும் காதலிக்க கூறி வற்புறுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமி அவர்களை பலமுறை எச்சரித்தும் பலனில்லை. 3 பேரும் தொடர்ந்து சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், வீட்டிற்குள் புகுந்த கொடூரர்கள் கத்தி முனையில் மாணவியை மிரட்டி இருக்கின்றனர். இதனால் அதிர்ந்துபோன மாணவி காப்பாற்றக்கூறி சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் பதறியபடி வந்துள்ளனர்.
வீட்டிற்குள் கத்தி முனையில் சிறுமி மிரட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 3 பேரையும் பிடித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், 3 வாலிபர்கள் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.