உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த புதுக்கோட்டை ராவணன் காளை மரணம்.! கடும் சோகத்தில் புதுக்கோட்டை மக்கள்.!



ravanan-jallikattu-kalai-died

2020 ஜல்லிக்கட்டில் அவனியாபுரம் முதல் உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை மாடுபிடி வீரர்கள் நெருங்க முடியாத அளவில் களத்தில் கெத்து காட்டிய காளைதான் ராவணன். பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் ராவணன் காளை பல பரிசுகளை வென்றது அனைவருக்கும் தெரியும். 

அந்த காளையின் உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பளுதூக்குதல் வீராங்கனை அனுராதாவிற்கு சொந்தமானது. பல ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ அனுராதாவின் காளை ராவணன் பற்றி தான் ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டது.

ravananபல ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த காளையை யாராலும் நெருங்க முடியவில்லை. ‘தொட்டு பாரு’, ‘தொட்டு பாரு’ என வர்ணணையாளர் கூறுவதும் வீரர்களை அந்த காளை அச்சுறுத்தி தொடவிடாமல் விரட்டுவதும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கவைக்கும். பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்கள் ராவணன் காளையை தொட நெருங்கும் போது அந்த காளை அவர்களை தொடவிடாதது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இரண்டுவாரங்களுக்கு முன்பு சோழன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்ட இராவணன் காளை வீடு திரும்பவில்லை. கடந்த 10 நாட்களாக காளையின் உரிமையாளர்கள் ராவணனை தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை இராவணன் காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதாக காளையின் உரிமையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காளையின் உரிமையாளர்கள் ராவணனை மீட்டு இறுதிச்சடங்கிற்காக அவர்களது இல்லத்திற்கு எடுத்துச்சென்றனர். இராவணன் காட்டுப்பகுதியில் பாம்பு கடித்து உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றனர்.