பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தங்கையின் மீது தீராத காதல்... இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்... உறவினர்கள் கைது.!
காஞ்சிபுரம் அருகே தங்கை உறவுமுறை பெண்ணை காதலித்து வந்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள அன்னூர் பகுதியைச் சார்ந்தவர் நிரஞ்சன் இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது உறவுக்கார பெண்ணான ரம்யா என்பவரும் காதலித்து வந்தனர். இதனால் நிரஞ்சனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் ரம்யா. இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பெரியவர்கள் ரம்யாவிடம் நிரஞ்சன் உனக்கு அண்ணன் முறை எனக் கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர்.
இதனால் ரம்யா நிரஞ்சனை தவிர்த்து வந்துள்ளார் மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரம்யாவின் பெற்றோர் அவரை திருவள்ளூரில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். எனது காதலியை பார்க்காததால் மனவருத்தத்தில் இருந்த நிரஞ்சன் திருவள்ளூர் சென்று ரம்யாவை சந்திக்க முற்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரம்யாவின் உறவினர்கள் நிரஞ்சனை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு போன் செய்து உங்கள் மகனை வந்து உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனைக் கேட்டு பதறி அடித்து ஓடி வந்த நிரஞ்சனின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே நிரஞ்சனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் நிரஞ்சனின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ரம்யாவின் உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்த காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.